Thursday, October 26, 2023

முதலையை ஏவி விட்டு விநோதமாகப் போராட்டம் நடத்திய கர்னாடக விவசாயிகள். Karn...

முதலையை ஏவி விட்டு விநோதமாகப் போராட்டம் நடத்திய கர்னாடக விவசாயிகள்.



19 அக்டோபர் 2023 அன்று கர்நாடக  உள்ள விஜயபுரா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஓரூ முதலையை பிடித்து வந்து மின்சாரம் வழங்கும் மின்சாரத்துறை அலுவலகத்தின் முன்பு அவிழ்த்து விட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலையுடன் விவசாயிகள் வந்து EB அலுவகத்தில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது சற்றே விநோதமாகவும் வித்தியாசமாநடகவும் இருந்தது.  


சரி அப்படி முதலையை கொண்டு வந்து போராட்டம் நடத்தும் அளவுக்கு அங்கு என்னதான் நடந்தது?  வாங்க செய்திக்குள்ளே போலாம்.

கர்நாடக ,மாநிலம் விஜயபுர மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு HESCOM என்றழைக்கப்படுகிற  Hubli Electricity Supply Company Limited மின்சாரம் அளித்து வருகிறது, தமிழ்நாட்டில் எப்படி  TANGEDCO என்று அழைக்கப்படுகின்ற  தமிழ்நாடு ஜெனெரேஷன் அண்ட் டிஸ்ட்ரிப்யூஷன் கார்பொரேஷன் மின்சாரம் வழங்குகிறதோ அதைப் போன்றதுதான் HESCOM.  

இந்த ஹெஸ்காம் அங்குள்ள விவசாயிகளுக்கு தேவையான மின்சாரம்  உரிய அழுத்தத்துடன் சரியாகாது தருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள்  பலநாட்களாக தீர்த்துக்கொள்ளப்படாமலேயே உள்ளது. இதனால் கடுப்பாகிப்போன எலஹள்ளி கிராமத்து மக்கள் அங்கே சுற்றிக்கொண்டிருந்த முதலையை பிடித்துக் கொண்டு போய் எப் அலுவலகத்தின் முன்னாள் அவிழ்த்து விட்டுவிட்டு இதுபோல தேள், பாம்பு, முதலையென எல்லாப்பகுதிகளிலும் சுற்றிக்கொண்டிருந்தால், இரவில் நாங்கள் உயிர்பிழைத்தது வாழ முடியுமா என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினர்.  எனவே இனிமேல் 3 phase மின்சாரமும் தேவையான அழுத்தத்துடன் தடையில்லாமல் தரவேண்டும் என்றோ கூறினார்.

இந்த நிகழ்வுகளையெல்லாம் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த எப் அலுவலர்கள், போரெஸ்ட் டெபார்ட்மென்டுக்கு போன் செய்ய, விரைந்து வந்த போரெஸ்ட்காரர்கள் அந்த முதலையை அலாக்காய்த் தூக்கிக்கொண்டுபோய் அலமாட்டி ஆற்றுப்பாடுகள் விட்டனர்.

ஆயினும் முதலையை ஏவிவிட்டு போராட்டம் நடத்திய அந்த மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பது வருத்தமான ஒன்றுதான்.

சரி மக்களே, இந்த வித்தியாசமான நிகழ்வு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் போடுங்கள், கமெண்ட் செய்யுங்கள், Subscribe செய்யுங்கள், மறக்காமல் பெல் பட்டனையும் ஒருமுறை தட்டிவிடுங்கள். 

அடுத்த நிக்வில் சந்திப்போம்,  நன்றி.   


No comments:

Post a Comment